கவிதாஞ்சலி பாடகர் எஸ்.எஸ்.பிக்கு.

பாட்டுக்கு பாலசுப்பிரமணியன் என பெயர் எடுத்தவனே

பாட்டுக்குள் பரவசம் சேர்த்தவனே

பாட்டை கேட்போரை எஸ் .எஸ் என தாளம் போட வைத்தவனே

காற்று மண்டலத்தையே உன்பிரிவால்

கலங்க வைத்தவனே

சொற்களுக்குள் நவரசம் சேர்த்து கொடுத்தவனே

பலாச்சுலையில்

தேன் கலந்து கொடுத்தவனே

உன் பூவிதழ் வழியே

கலந்து வரும்

காற்றுக்கு மட்டும்

எப்படி வந்தது

இத்தனை மணம்

உன் நாவசைவால்

எங்கள் அங்கங்களை எல்லாம்

நடனம் ஆட வைத்தவனே

கவிதை மழைக்கு

மண் வாசனை சேர்த்தவனே

கவிதை வரிக்குள் புகுந்து

சொற்களை நடனம் ஆட வைத்து விட்டவனே

மண்ணில் விளைந்த தங்கம்

மண்ணில் புதைந்து விட்டதே

உன்பாட்டுக்கு எதிர் பாட்டேது

உன் பாட்டுக்கு எதிர்பாட்டேது

செவிக்குள் புகுந்து சிந்தனையை சிறகடிக்க வைத்தவனே

உன் பாட்டிசை கேட்டு

பரவசமடையாதவர் உண்டோ

உன் பாட்டை ஒலிக்காத

உதடுகள் தான் உண்டோ

தமிழகத்தில் ஒலித்த

அந்த தேவகாணம்

விண்ணகம் ஒலிக்க

சென்றுவிட்டதோ

சப்த சுரங்கள் உன்னோடு

சாந்தி அடைந்து விட்டதுவோ

About vasan

I hold a Master Degree in Botany M.Phil degree in Education I served as an teacher and as an Officer in the School Education Department worked in various capacities -served as a faculty in teacher education - as a Text book writer .
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a comment