அமைதி அடைவாய் மனமே

இன்று அமாவாசை இருள்

வெளியே மட்டும் இல்லை
உள்ளத்திலும் ஒரே இருள்

மறையாத துயர்

விடியாத இரவு

வடியாத கண்ணீர்

வாட்டும் துயரம்

மறக்க முடியாத நினைவுகள்

மறு ஒளி பரப்பு செய்கிறது

கல்லான இதயம்

ஓ மகளே

கணவனின் கைப்பாவை ஆனது எப்போது ?

மகுடிக்கு அடங்கும் பாம்பானது எப்போது ?

சுயத்தை இழந்தாய்

சொந்தத் தை இழந்தாய்

கணவனிடம் கரைந்து போனாய்

கதவடைத்த அறைக்குள் நான்

உள்ளே ஏ.சி ஆனாலும்

உள்ளத்திலே புழுக்கம்

பூட்டிய மனது

மெல்ல திறந்தது

களவாடப்பட்ட நினைவுகள்

எட்டிப்பார்த்தது

காட்டிக் கொடுத்துது சோகம்

காட்சிக்கு வராத நிகழ்வுகள்

மனத்திரையில் நிழலாட

விடுதலை பெறாத நினைவலைகள்

புரட்டிப் போட்டது சோகம்

குற்றம் புரிந்தேனா நான் புரியவில்லை

தடம் மாறியாது யார் ?நானா?மகளா?

மணம் முடித்து வைத்து மனதை தவறவிட்டேனா?

வேஷதாரியிடம் ஏமாந்து போனேனா?

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையாய் மாறிவிட்டாய் மகளே

கூண்டுக்குள் அடைப்பட்ட சிங்கமாய்

சர்க்கஸ்காரன் கம்பனுக்கு கட்டுப்பட்டுவிட்டாய்

எனது கைபேசி அழைப்பை கூட ஏற்காது கல்லாகி போனது உன் மனது

சதிகார கும்பலில் கட்டுண்டாய்

காணமல் போயிவிட்டாய்

கூகுளில் தேடினாலும் தோன்றினாலும் கிடைக்காத அன்பு

அன்பை இழந்து விட்டாய்

அடிமைசாசணம் எழுதி கொடுத்துவிட்டாய்

மந்திரகோலுக்கு மயங்கி விட்டாய்

எல்லாவாகமும் இருக்க அவர் என்ன அந்த அர்த்த நாரிஸ்வரா?

மாட்சிமை இழந்து விட்டாய்

இரகசிய காப்பு எடுத்துக் கொண்டுவிட்டாய்

சுயத்தை இழந்தாய்

சொந்தத்தை இழந்தாய்

மாற்ற முடியாத உறவை‌ மாசு படுத்திவிட்டாய்

தவிக்கிறது மனது

புரட்டிப் போட்ட துரோகம்

மரித்து போன‌உணர்வுகள்

ஓப்பனையில்லா நடிப்பு

கற்பனைக்கு எட்டாத தந்தை-மகள் உறவு

துரோகத்தின் மறு பிரதிபலிப்பு

கணவனின் கபட நாடகம் புரியாமல் மரித்து போன மகள்

லஞ்சகத்தின் வளர்ப்பில் காணமல் போனாய்

தந்தையாய் இழந்தது எத்தனையோ!

எனக்கு மகளாய் பிறந்தது உன் குற்றமா ?

உனக்கு தந்தையாய் பிறவி எடுத்தது எனது குற்றமா ?

செக்கில் இட்ட எள்ளாய் நான் சிக்கி தவிக்கின்றேன் என்று

மணவாளனிடம் மதி கெட்டு போனவளே

என்னால் உனக்கு மன உலச்சல் என்று ஏமாற்று காரனின் பேச்சில் மயங்கி விட்டாய்

உன்னிடத்தில் எதையும் எதிர்பார்க்கவில்லை அனபைத்தவிர‌

இக்கட்டான சூழ்நிலையில் பரிவும் பாசத்தையும் தவிர‌

ஆனால் நீயோ

குடுகுடுப்பை காரன் மாடாய் மாறிவிட்டாய்?

உன்

கண்ணாளனின் நாடகம் முடிந்தது திரை விலகியது

வேஷம் கலைந்தது

இனி எந்த அரிதாரமும் பூசி ஏமாற்ற முடியாது

ஒப்பணை இல்லா நடிப்பு

அற்புதம் அற்புதம்

மருமகன் வேடம் நன்றாக பொருந்தியிருந்தது

வாழ்நாள் ஆஸ்கார் விருது அவரின் நடிப்பிற்கு வழங்கலாம்

ஆனால் என்ன செய்ய‌ அரங்கேறுமுன் அம்மணம் ஆனது

அன்று நான்தானே உன் மூச்சு

இன்று நீதானே என் பேச்சு

மெல்ல கொள்ளும் விஷமானாய்

நான் அறியாமலேயே என்னை வீழ்த்தி விட்டாய்

மீண்டும் பிறக்க போவதில்லை

ஜென்மத் தொடர்பு அறுகிறது

என்னை இழந்து

உன்னை இழந்தாய்

இரும்பில் தோன்றிய துரு இரும்பையே அழிப்பது போல என்னில் தோன்றி என்னை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிட்டாய்

அதன் சேர்க்கை அப்படி

ஆகிஜனோடு சேர்ந்ததாலே தன்னை தான் அழித்துக்ககூ கொள்கிறோம்

என்றியாமல் தனை அழிந்து கொள்ளும் இரும்பானை

மகளே

வலிக்கிறது மனது துடிக்கிறது இதயம்

என் இதய துடிப்பை. நிறுத்திவிட்டாய்

ஆதரவாய் இல்லை பரவா இல்லை

ஆறுதலையாய் கூட இல்லை

புரியாத புதிரானாய்

இழப்பை மட்டும் தந்துவிட்டாய்

காலங்கள் கடந்தாலும்

காயங்கள் ஆறினாலும் இனி

வடு மறையப் போவதில்லை

உனக்காக நான் இழந்தது ஏராளம் ஏராளம்

மனம் போல் வாழ்வாய் மகளே

என்றாவது என் நினைவு வந்தால் ஒரு சொட்டு கண்ணீர் விடு

பார்த்து பார்த்து செய்தவனை

பாரா முகமாய் இருந்துவிட்டாய

வாழ்வின் விளிம்பில் பலன் அறிவாய்

அமைதி அமைதிஅடைவாய்

தென்னையை பெற்றா இளநீரு பிள்ளையை பெற்றா கண்ணீரு அன்றே எழுதி வைத்தானே

பெற்றவன் மனது பித்தம்மா

பிள்ளை மனது கல் அம்மா

மகள் என்றொருவள் இல்லை என‌ மனமே அமைதி அடைவாய் அமைதி அடைவாய்

About vasan

I hold a Master Degree in Botany M.Phil degree in Education I served as an teacher and as an Officer in the School Education Department worked in various capacities -served as a faculty in teacher education - as a Text book writer .
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a comment