காட்டு மரம்

நான் ஒரு காட்டு மரம் நான் ஒரு அபூர்வ மரம் ,கர்பக விருஷம்

மழை ,காற்று வெய்யில் போராடி வளர்ந்த மரம்

வளர்ந்த பின் வேரோடு பிடிங்கி வீட்டில் நட்டார்கள்

தோட்டத்தில் தழைத்து வேரூன்றி உயிர்த்து எழுந்தேன்

உடன் மற்றோரு மரமும் நட்டார்கள்

நானும் உடன் வளர்ந்த மரமும் செழித்து வளர்ந்து நிழல் தந்தோம் பலன் தந்தோம்

எங்கள் நிழலில் இளப்பாரியவர்கள் ஏராளம்

மழை தந்தோம்

மணம் தந்தோம் என்று

காட்டு மரம் காணா பாட

கடல் அலைகள் தாளம் போட

விண்மீன்கள் நடனமாட

பகலவன் பார்வையில் வானுயுர வளர்ந்தோம்

எங்கள் நந்தவணத்தில் செழித்து வளர்ந்தோம்

பூத்து குளுங்கினோம்

பூக்களைகொய்து மகிழ்ந்தவர்கள் ஏராளம்

உடன் வளர்ந்த மரங்களுக்கு வாழ்வு தந்தோம்

பூக்கள் பல தந்தோம் ஆனாலும் கனி மட்டும்

ஒன்றே ஒன்று தான் தந்தோம்

அந்த கனியை எங்கிருந்தோ வந்த வல்லூறு

ஒன்று கொய்து கொண்டு பறந்தது

பழத்தின் விதை விழுந்த இடத்தில் முளைக்கவில்லை

விழுந்த இடம் ஒரு பாலைவனம் போலும்

வயதான தாய் மரம் கொஞ்சம் கொஞ்சம் பட்டுப் போக ஆரம்பித்தது

பார்ப்பாரும் யாருமில்லை

கேட்பாரும் எவருமில்லை

மரம் மண்ணில் விழும் போது புரிந்தது பிறந்து வளர்ந்ததுமற்றவர்கள் இளப்பாரத்தான் என்று

மரத்திற்கு புரிந்தது தனது இனம் அழியப் போகிறது என்பது Endangered species

நினைத்துப் பார்த்து தான் கம்பீராமாக ஓங்கி வளர்ந்து வாழ்ந்த வாழ்விற்கு அர்த்தம் ஏதும் இல்லை என்பது புரிய ஆரம்பித்தது

வாழ்ந்த வசந்த காலத்து வாழ்வின்

கம்பீரம் மிடுக்கு அத்துணையும். மண்ணோடு மண்ணாது

மக்கி உரமாகி மண்ணிற்கு வளம் சேர்க்கத்தான் என்று

ஏதோ எங்கேயோ முளைத்து வளரும் செடிக்கு மக்கி உணவாகப் போகிறோம் என்பது

மண்ணில் மடியும் போது

தான் புரிந்தது

எதுவும் சில காலம் ,

இதுவும் கடந்து போகும் ,

காலம் தான் எல்லாவற்றிற்கும் மருந்து என்பது புரிந்து

About vasan

I hold a Master Degree in Botany M.Phil degree in Education I served as an teacher and as an Officer in the School Education Department worked in various capacities -served as a faculty in teacher education - as a Text book writer .
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a comment