திருமண வாழ்த்து

நாள்: 02.04.3031                         இடம்:    “ EM.EL.EM திருமண மண்டபம் ,சென்னை –34

 மணமகன் :-  திருநிறைச் செல்வன்    ஜகன்  

                   மணமகள்:- திருநிறைச்செல்வி சுவாதிகா

இல்லறத்தை  நல்லறமாய்க் கொண்டு

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது

என்ற வள்ளுவன் வாக்கினை

வாழ்க்கை நெறியாய் கொண்டு

வாழுந்து வரும் தம்பதிகளாம்

திரு. வெ ..இராம கிருஷ்ணன் –  திருமதி  இரா கீதா. தம்பதியரின்

கண்ணான திருமகளாம்  செல்வி  சுவாதிகா  

பொன்னான மணவாளனாம் செல்வன் ஜகன்

மத்தளம் முழங்க கைத்தலம் பிடிக்கும் இந்நாளில்

தூயஅன்புத்துணையுடன்

நிகரில்லா வாழ்வில் அன்பு  பாராட்டி

அறம் பொருள் இன்பம் கூட்டி

குன்றாத இல்வாழ்வினில்

குறைவில்லாமல்  வாழ்ந்திடவே

விண்ணவரும் மண்ணவரும் ஒன்றாய்க்கூடி

 வாழ்கெனவே வாழ்த்துகின்றோம்

இருமனமும் ஒருமனமாய் மலரும் மணமுமாய்

நாதமும் கீதமுமாய்  பாட்டும் பரதமுமாய்

வாழும் குறளாய்  வள்ளுவமாய்

புரிதலும் அறிதலும் ஒன்றாகி

அன்பும் காதலும் தினம் பெருகி

தேனில் தோய்ந்த  பலாவாகி

வாழ்க்கை தெவிட்டா சுவையுமாகி!!!

வானத்து வல்லுராய்

இணையில்லா ஜோடியாய்

இல்லறத்தின் இலக்கணமாய்

இரட்டைகிளவியாய்

இல்லறம் மணக்க நல்லறம் போற்ற

பார்ப்போர்  புருவம் உயர

அன்புடனும் அறனுடனும்

பண்போடும் பாசத்தொடும்

ஆன்றோரும் சான்றோரும் போற்ற

 கிட்டா புகழும் எட்டா சிறப்பும் பெற்று

ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி

 நல்லறம் பேணி  நாட்டறம் காத்து

மலையென ஓங்கி  வான்புகழ் எய்தி

சங்கேத மொழி பேசி சங்கமிக்கும்

கணினியும், சுட்டியுமாய்

இன்டெலும் பிராஸசருமாய் 

கைபேசியும், கரமுமாய் இணைபிரியாமல்

 எல்லா நலமும்  எல்லா வளமும்

நல்லோர் வாழ்த்தும் நாளெல்லாம் பெற்று

இறையருள்  வழித்துணையாய் வர

 திருக்குறள் வழிநின்று வையகம் போற்ற

இல்லறம் பேணி நல்லறம் காத்து

வாழகவென  வாழ்த்துகிறோம்

இவன்; கடலூர் மேனாள் பள்ளிக்கல்வி துணை இயக்குனர் வெ  சீனிவாசன் – முனைவர் அனுசுயா

About vasan

I hold a Master Degree in Botany M.Phil degree in Education I served as an teacher and as an Officer in the School Education Department worked in various capacities -served as a faculty in teacher education - as a Text book writer .
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a comment